கொரோனா - நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி

தினமலர்  தினமலர்
கொரோனா  நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி

உலகம் முழுவதும் பரவி வரும் கொரானோ வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கிற்கு மக்கள் அனைவரும் வரவேற்பு அளித்து அதைப் பின்பற்றி வருகின்றனர். மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல நிறுவனங்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் , பிரமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி தருவதாக அறிவித்துள்ளார். இதுதவிர ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி என மொத்தமாக ரூ.2 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

“பிரதமரது முன்மாதிரியான மற்றும் ஊக்கமளிக்கும் தலைமை, கொரானோ தொற்றிலிருந்து நம் நாட்டைக் காப்பாற்றும்” என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை