10வது ஆண்டைக் கடக்கும் 'அங்காடித் தெரு'

தினமலர்  தினமலர்
10வது ஆண்டைக் கடக்கும் அங்காடித் தெரு

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள்தான் காலத்தைக் கடந்தும் நினைவில் நிற்கும் படங்களாக இருக்கும். எளிய மக்களின் வாழ்க்கைப் பதிவை அப்படியே கண்முன் நிறுத்திய படங்களில் ஒன்று 'அங்காடித் தெரு'.

வசந்தபாலன் இயக்கத்தில், மகேஷ், அஞ்சலி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 10 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் வெளிவந்தது. நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்ற ஒரு படம்.

சென்னை, தியாகராய நகரில் ஒரு பிரம்மாண்டமான கடையில் பணி புரியும் நாயகன், நாயகி. அவர்களுக்கு இடையே உருவாகும் காதல், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என மனதை உருக்கிய ஒரு படம்தான் 'அங்காடித் தெரு'.

ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார்.

அறிமுகமாக இருந்தாலும் மகேஷின் நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக அமைந்தது. 'கற்றது தமிழ்' படத்திற்குப் பிறகு அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அவர்கள் இருவரையும், லிங்கம், கனி ஆகவே பார்க்க வைத்தது.

இன்று படத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி படத்தின் இயக்குனர் வசந்தபாலன், ''வருடங்கள் மாறிவிட்டன, வலிகள்...'” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை