ஊரடங்கை செயல்படுத்துவது எப்படி?: பிரதமர், முதல்வருக்கு நீரவ்ஷா யோசனை

தினமலர்  தினமலர்
ஊரடங்கை செயல்படுத்துவது எப்படி?: பிரதமர், முதல்வருக்கு நீரவ்ஷா யோசனை

தமிழ் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. இவர் தற்போது நடைமுறையில் இருக்கும் மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி என்பது பற்றி பிரதமர் மற்றும் முதல்வருக்கு சில யோசனைகளை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர், முதல்வருக்கு டேக் செய்து வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தயவுசெய்து பெட்ரோல் பங்க்குகளை மூடுங்கள். சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, பணம் எடுத்துச் செல்வதை அனுமதிக்கக் கூடாது. எல்லா வகையான தவணைகளும், பணம் செலுத்தும் முறைகளும், சம்பளங்களும் முடக்கப்பட வேண்டும். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அத்தியாவசியத் தேவைகள் அல்லாத அலுவலகங்களுக்குச் செல்லும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் தயவுசெய்து துண்டிக்க வேண்டும். பொருளாதார முடக்கமும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதரவும், எதிர்ப்புமான கருத்துக்களை நெட்டிசன்கள் பின்னூட்டத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை