இணையதளத்தில் ஏப்ரல் 14வரை எச்டி தரத்ததில் படம் பார்க்க முடியாது

தினமலர்  தினமலர்
இணையதளத்தில் ஏப்ரல் 14வரை எச்டி தரத்ததில் படம் பார்க்க முடியாது

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இந்தியாவும் வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள் முடங்கியுள்ள பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு செல்போன் மற்றம் இணைய தளங்கள்தான்.

தற்போது எல்லோரும் ஒரே நேரத்தில் இவற்றை பயன்படுத்துவதால் செல்போன் மற்றும் இணையத்தின் தரவிறக்கத்தின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இணைய தளத்தில் திரைப்படங்களை தரும் முதன்மை நிறுவனமான அமேசான் ப்ரைம் மக்கள் ஏப்ரல் 14ந் தேதி வரை எங்கள் படங்களை எச்டி தரத்தில் பார்க்க இயலாது எஸ்டி தரத்தில் மட்டுமே பார்க்க முடியும். போன் தொடர்புக்கான தேவை அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமேசான் ப்ரைமில் நீங்கள் தொடர்ந்து படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் நேரத்தில், நாட்டில் உள்ள அனைவருக்கும் மொபைல் போனில் இன்டர்நெட் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். சில தவிர்க்க முடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி குவாலிட்டியில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம். எச்டியோ அல்லது எஸ்டியோ நாங்கள் உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்போம். தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். என்று குறிப்பிட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்த அறிவிப்பை வெளியிட இருக்கிறது. 14ந் தேதிக்கு பிறகு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

மூலக்கதை