அமைச்சருக்கு சேனிட்டரி கேன் பரிசளித்த பார்த்திபன்

தினமலர்  தினமலர்
அமைச்சருக்கு சேனிட்டரி கேன் பரிசளித்த பார்த்திபன்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் எதையும் புதுமையாக செய்கிறவர். நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்த அவர், அவரின் பணியை பாராட்டி அவருக்கு 5 லிட்டர் சேனிட்டைர் கேனை பரிசாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் கடமையை செவ்வனே செய்வதற்காக அவரைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சேனிட்டைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகு கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன்.

இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன். அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

மூலக்கதை