துணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி கணேஷ் 10 லட்சம் நிதி

தினமலர்  தினமலர்
துணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி கணேஷ் 10 லட்சம் நிதி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 19ந் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்களும், துணை நடிகர், நடிகைகளும் வேலை இழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தினக்கூலி பணியாளர்கள். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று முன்னணி நடிகர், நடிகைகள் பெப்சி அமைப்புக்கு நிதியும், அரசியும் வழங்கி வருகிறார்கள்.
111
இதேபோல வேலை இன்றி தவிக்கும் துணை நடிகர், நடிகைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நமது சங்கத்தைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேயப் பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள், நமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் வேலை வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது தெரியவருகிறது. எனவே, அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதும். அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும்.

இந்த அறிக்கையை தொடர்ந்து முதல் நபராக ஐசரி கணேஷ் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

மூலக்கதை