அப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த ராம்சரண், 70 லட்சம் உதவி

தினமலர்  தினமலர்
அப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த ராம்சரண், 70 லட்சம் உதவி

கொரானோ வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இக்கட்டனா சூழலைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு பிரபலங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சினிமா பிரபலங்கள் பெப்ஸி தொழிலாளர் அமைப்பு மற்றும் நடிகர் சங்கத்தினருக்கு உதவி செய்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகர்கள் மத்திய அரசு மற்றும் தெலங்கானா, ஆந்திரா அரசுகளுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மொத்தமாக 2 கோடி உதவியை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அவரது அண்ணன் நடிகர் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் 70 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இன்றுதான் அவர் டுவிட்டரில் புதிய கணக்கைத் தொடங்கினார். தன்னுடைய முதல் பதிவாக இந்த உதவியை அவர் அறிவித்துள்ளார். நேற்றுதான் நடிகர் சிரஞ்சிவி டுவிட்டருக்குள் வந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ராம்சரணும் தற்போது டுவிட்டருக்குள் வந்துள்ளார்.

மூலக்கதை