வொர்க்அவுட் வீடியோக்களை நிறுத்துங்கள், பரா கான் காட்டம்

தினமலர்  தினமலர்
வொர்க்அவுட் வீடியோக்களை நிறுத்துங்கள், பரா கான் காட்டம்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் பலர் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள் அதிகம் இடம் பெறுகின்றன.

உலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் இப்படி உடற்பயிற்சி வீடியோக்களை சிலர் வெளியிடுகிறார்களே என ரசிகர்கள் பலர் தங்களது கோபங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் பாலிவுட்டின் பெண் இயக்குனரான பராகான், அப்படியான வொர்க்அவுட் வீடியோக்களை வெளியிடாதீர்கள் என பிரபலங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

“உலகமே மிகப் பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இப்படி வீடியோக்களைப் பதிவிடுவது சரியல்ல. அப்படி பதிவிட்டால் உங்களை நான் அன்பாலோ செய்துவிடுவேன்,” என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை