கர்ப்பிணிக்கு தனது காரை கொடுத்து உதவிய நடிகை ரோஜா!

தினமலர்  தினமலர்
கர்ப்பிணிக்கு தனது காரை கொடுத்து உதவிய நடிகை ரோஜா!


ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியி இடம்பெற்றுள்ள நடிகை ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக தனது நகரி தொகுதிக்கு சென்றிருக்கிறார் ரோஜா.

அப்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை என்றதும், உடனே தனது காரில் அந்த பெண்ணை திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றதும் உடனே தனது காரை அனுப்பி கர்ப்பிணிக்கு ரோஜா உதவி செய்த தகவல் வெளியானதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மூலக்கதை