செல்லப்பிராணிகளுக்காக வரலட்சுமி வைத்த வேண்டுகோள்!

தினமலர்  தினமலர்
செல்லப்பிராணிகளுக்காக வரலட்சுமி வைத்த வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை வரலட்சுமி. அதையடுத்து தற்போது இன்னொரு வீடியோவும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், பலரும் தங்களது செல்லப்பிராணிகளை வீட்டில் விட்டுவிட்டு சொந்த ஊர்களுக்கு போய்விட்டார்கள். செல்லப்பிராணிகளும் நம்மைப் போன்ற ஒரு உயிரினம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. கொரோனா வைரஸ் பற்றி நாய், பூனைகளுக்கு எதுவும் தெரியாது. தெருநாய்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் முடிந்தால் சாப்பாடு, தண்ணீர் கொடுங்கள். நான் இப்படி சொல்வதால் உடனே ஒரு குரூப் ஓடிவந்து எங்களுக்கே சாப்பாடு இல்லை, நாய்களுக்கு எப்படி போடுவது என்பார்கள். ஆனால் நான் எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. முடிந்தவர்கள் மட்டும் மற்ற விலங்களுக்கும் சாப்பாடு, தண்ணீர் கொடுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

மூலக்கதை