3 பேர் பலியான நிலையில், குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… இதுவரை 1 கோடி மக்கள் கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி

தினகரன்  தினகரன்
3 பேர் பலியான நிலையில், குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… இதுவரை 1 கோடி மக்கள் கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி

அகமதாபாத் : குஜராத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக சீனாவில் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, ” கொரோனா தொற்று காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். அந்த 3 பேரில் 85 வயது மூதாட்டியும், பவ்நகரை சேர்ந்த 70 வயது நபர் ஒருவரும் அடங்குவர். மேலும் மூதாட்டி சவுதி அரேபியா சென்று வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை சார்பில் சுமார் 1 கோடி மக்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 1,60,62,000 மக்களுக்கு தோற்று நோய், கடுமையான சுவாச நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது எனவும், அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்”.தற்போது இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை