வாகன உற்பத்தி நிறுத்தம் ரூ.2,300 கோடி இழப்பு

தினமலர்  தினமலர்
வாகன உற்பத்தி நிறுத்தம் ரூ.2,300 கோடி இழப்பு

புதுடில்லி : கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, வாகனங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டதை அடுத்து, நாள் ஒன்றுக்கு, 2,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா உள்ளிட்ட பல நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. மேலும், டி.வி.எஸ்., ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.இந்நிலையில் இதனால் ஏற்படும் இழப்பு குறித்து இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது:கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து, வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான பாகங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு, 2,300 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமின்றி; டயர் தயாரிப்பாளர்கள், உதிரிபாகங்களை தயாரிப்பவர்கள் ஆகியோரும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து, தோராயமாக கணக்கிடும்போது, இழப்பு, நாள் ஒன்றுக்கு, 2,300 கோடி ரூபாய் ஆகிறது.இவ்வாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை