21 நாட்களில் இழப்பு

தினமலர்  தினமலர்
21 நாட்களில் இழப்பு

மும்பை : கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனால், நாட்டின் பொருளாதாரத்தில், 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று, பங்கு தரகு நிறுவனமான, பார்க்லேஸ் நிறுவனத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:நாடு ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இதனையடுத்து, இழப்பு, 9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதமாகும். இதில், மூன்று வாரத்தில் மட்டும் இழப்பு, 6.84 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 3.5 சதவீதமாக இருக்கும். இது, இதற்கு முந்தைய கணிப்பிலிருந்து, 1.7 சதவீதம் குறைவாகும்.

ரிசர்வ் வங்கி, அடுத்த மாதம் அதன் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதத்தை, 0.65 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அடுத்து வரும் காலங்களில், மேலும் 1 சதவீதம் அளவுக்கு வட்டிக்குறைப்பை அறிவிக்கும் என கருதுகிறோம்.நிதிப் பற்றாக்குறையானது, அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 சதவீதம் என்ற பட்ஜெட் இலக்கிலிருந்து அதிகரித்து, 5 சதவீதமாக உயரும் என கருதுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளது.

மூலக்கதை