சேவையை நிறுத்தியது ‘பிளிப்கார்ட்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
சேவையை நிறுத்தியது ‘பிளிப்கார்ட்’ நிறுவனம்

புதுடில்லி : நாடு, 21 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், வால்மார்ட்டுக்கு சொந்தமான, பிளிப்கார்ட் நிறுவனம், தன் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:நாடு, 21 நாட்கள் முடக்கப்படுவது குறித்து, உள்துறை அமைச்சகம் கடந்த, 24ம் தேதியன்று ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், பிளிப்கார்ட் நிறுவனம், தற்காலிகமாக சேவையை நிறுத்திக் கொள்கிறது. எவ்வளவு விரைவாக மீண்டும் சேவையை வழங்க இயலுமோ, அவ்வளவு விரைவில் வழங்குவோம்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.இதற்கிடையே, அமேசான் இந்தியா நிறுவனமும், அத்தியாவசிய பொருட்களுக்கான ஆர்டரை மட்டுமே கையாளப் போவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் வணிகமான, மில்க் பேஸ்கட் உள்ளிட்ட பல நிறுவனங்கள், வினியோகத்தில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்து உள்ளன.அரசு, ஆன்லைன் மூலம் அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருந்து, மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதில் எந்த தடையுமில்லை என அறிவித்துள்ள போதிலும், வினியோகத்தில் சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளன.

மூலக்கதை