ஊரடங்குக்கு கட்டுப்படாத காளை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

தினமலர்  தினமலர்
ஊரடங்குக்கு கட்டுப்படாத காளை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

மும்பை : பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்க, 2 லட்சம் கோடி டாலர் நிதி வழங்குவது என, அமெரிக்கா எடுத்த முடிவை அடுத்து, உலக சந்தைகளில் நேற்று ஏற்றம் நிகழ்ந்தது.

இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.மேலும், மத்திய அரசும், 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்ததை அடுத்து, நிதி சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் அதிகரித்தது. கூடவே, ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததும் சந்தைக்கு வலுவூட்டியது.இதன் தொடர்ச்சியாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 1861.75 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 28535.78 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 516.80 புள்ளிகள் அதிகரித்து, 8317.85 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 15 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை எட்டியது. இதனையடுத்து, கோட்டக் பேங்க், மாருதி, எச்.டி.எப்.சி.,டுவின்ஸ், டைட்டன், ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தன.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், ஓ.என்.ஜி.சி., ஐடிசி, பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்குகள், விலை சரிவை எதிர்கொண்டன.

மூலக்கதை