மார்கோவுக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
மார்கோவுக்கு கொரோனா

இத்தாலியில் நடைபெறும் ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்கும் அடலான்டா அணியின் கோல்கீப்பர் மார்கோ ஸ்போர்ட்டியல்லோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அடலான்டா கிளப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மார்கோவுக்கு கோவிட்-19 நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த குவாரன்டைன் காலம் மார்ச் 27ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி கால்பந்து லீக் தொடரில் விளையாடும் 15 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை