ட்வீட் கார்னர்... ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு  ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கூட்டாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ‘இந்த சோதனையான காலகட்டத்தில் நிலைமையின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்ட  வழிமுறைகளை ஒற்றுமையுடன்  கடைப்பிடிக்க வேண்டும். இது அனைவருக்கும் எங்களின் வேண்டுகோள். சமூக இடைவெளி மட்டுமே கொரோனா தொற்றை தடுக்கும்’ என்று தகவல் பதிந்துள்ளனர்.

மூலக்கதை