நாசிக் மொத்த சந்தையில் ஏலம் நிறுத்தம்: வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது

தினகரன்  தினகரன்
நாசிக் மொத்த சந்தையில் ஏலம் நிறுத்தம்: வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது

நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையிலில் வெங்காயம் ஏலம் விடுவது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் விலை மீண்டும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தை, நாசிக்கின் லாசல்காவில் உள்ளது. இங்கிருந்து மகாராஷ்டிராவின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் வெவ்வேறு மாநிலங்களுக்கும் வெங்காயம் சப்ளை செய்யப்படுகிறது. அதேபோன்று அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகும் வெங்காயம் இங்கு ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக் லாசல்காவ் சந்தையில் வெங்காயம் ஏலம் விடுவது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளுக்கும் பக்கத்து மாநிலங்களுக்கும் வெங்காயம் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதால் மீண்டும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை