கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரளாவில் தொற்றுநோய் தடுப்பு அவசர சட்டம்: பினராய் விஜயன் தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரளாவில் தொற்றுநோய் தடுப்பு அவசர சட்டம்: பினராய் விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:  கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 6 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் அவர்களுக்கு ேநாய் இல்லை எனறு தெரிய வந்துள்ளது. இதையடுத்து 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர். இன்று நோய் கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் துபாயில் இருந்தும் தலா ஒருவர் இங்கிலாந்து, பிரான்சில் இருந்தும் வந்துள்ளனர். 3 பேர் நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் ெதாடர்பில் இருந்தவர்கள். எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்சி டிரைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பிரான்சில் இருந்து வந்தவரை டாக்சியில் அழைத்து சென்றவர் ஆவார்.வீடுகளில் தனியாக இருப்பவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு ெகாடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நோய் பாதித்த திருநங்கைகளுக்கு தனி இட வசதி ஏற்படுத்தப்படும். அரசின் தேவைகளுக்காக படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் வாகனங்களை விட்டுத்தருவதாக சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர். தொற்றுநோய் தடுக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த கேரள தொற்றுநோய் தடுப்பு அவசர சட்டம் 2020 கொண்டுவர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சட்டம் கொண்டு வருவதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பொதுமக்கள், தனி நபர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் கிடைக்கும். இந்த சட்டத்தின்படி மாநில எல்லைகளை மூடலாம். பொது, தனியார் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தலாம். பொது இடங்கள், மத வழிபாட்டு தலங்களில் ஆள்கூட்டத்திற்கு தடை விதிக்கவோ கட்டுப்படுத்தவோ செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.சாலைகளில் சுற்றிய 2,000 பேர் மீது வழக்குகேரளாவில் தடை உத்தரவை மீறி சாலைகளில், வாகனங்களில் சுற்றித்திரிந்த 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 300க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஏராமானோர் கார், இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே நடமாடினர். இதுதொடர்பாக கேரளா முழவதும் 300க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 2000 பேருக்கு மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 400 வாகனங்களுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டன.சபரிமலை திருவிழா தள்ளிவைப்புதிருவிதாங்கூர்  தேவசம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சபரிமலை  ஐயப்பன் கோயிலில் வரும் 29 முதல் ஏப்ரல் 7 வரை பங்குனி உத்திர திருவிழா  நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக 28ம் தேதி கோயில் நடை  திறப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடு முழுவதும்  லாக்-டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவிழாவை தள்ளி வைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும்  பூஜைகள், முக்கிய சடங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளுக்கும் பூட்டு கேரளாவில் மது பார்கள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளையும் மறு உத்தரவு வரும் வரை மூட  வேண்டும் என்று நேற்று அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதித்தவருடன் 36 தமிழர்கள் பயணம்துபாயில் இருந்து வந்த காசர்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. காசர்கோடு மருத்துவமனையில்  தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவர் வந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 36 பேர் உட்பட 250 பயணிகள் இருந்தனர். இது குறித்த விவரங்கள் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிளிடம் அளித்துள்ளார்.அனைத்து கார்டுகளுக்கும் 15 கிலோ இலவச அரிசிதிருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் தலா 15 கிலோ அரசி இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு அரிசி, தானிய வகைகள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மூலக்கதை