என்பிஆர் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
என்பிஆர் ஒத்திவைப்பு

அசாமை தவிர பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய மக்கள் தொகை பதிவை (என்பிஆர்) புதுப்பித்தல், 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை பட்டியலிடும் பணி ஏப்ரலிலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி அடுத்தாண்டு பிப்ரவரியிலும் தொடங்கப்பட இருந்தன. தற்போது, கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 3 வாரங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இதற்கான பணிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

மூலக்கதை