அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் உஷார்: பஸ்வான் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் உஷார்: பஸ்வான் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றுமுன்தினம்  நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.  இந்நிலையில், மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் டிவிட்டர் பதிவில், `கொரோனா வால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையை அரசு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி லாபம் ஈவதை உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் .தவிர்க்க வேண்டும்,’ என்று எச்சரித்துள்ளார்.

மூலக்கதை