ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேர் ஜோத்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேர் ஜோத்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதி

ஜெய்ப்பூர்: கொரோனா பாதிப்புக்குள்ளான ஈரானில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட 277 பேர், ராஜஸ்தான் மாநிலம். ஜோத்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 273 பேர் யாத்திரீகர்கள். அவர்கள்  வந்த விமானம் ஜோத்பூர் விமான நிலையத்தை அடைந்ததும் அவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், ஜோத்பூர் ராணுவ மருத்துவமனையில் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ரோகித் குமார் சிங் கூறுகையில், ``273 யாத்திரீகர்களில் 149 பேர் சிறுமிகள், பெண்களாவர். முதல் கட்டமாக இவர்களுக்கு நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான சிகிச்சையை தொடர்ந்து அளிக்க ராணுவத்தினருடனும் மாவட்ட நிர்வாகத்தினருடனும் மாநில சுகாதாரத் துறை தொடர்பில் உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை