கண்ணீர்!

தினமலர்  தினமலர்
கண்ணீர்!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடத்தில் தோன்றும் படம், சைலன்ஸ். இப்படத்தின், 'பிரமோஷன்' நிகழ்ச்சி, தனியார், 'டிவி' ஒன்றில் நடந்தது. அப்போது, மறைந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா குறித்து பேச்சு வர, அவரை நினைத்து நெகிழ்ந்து அழுதுவிட்டார் அனுஷ்கா. தற்போது, அது குறித்து கூறிய அவர், ''கோடி ராமகிருஷ்ணா இயக்கிய, அருந்ததி படம் தான், என்னை புகழ் பெற்ற நட்சத்திரமாக உருவாக்கியது,'' என்றார்.

மூலக்கதை