இந்திய டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயாஸ் ‘வெயிட்டிங்’ | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயாஸ் ‘வெயிட்டிங்’ | மார்ச் 25, 2020

மும்பை: ‘‘இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 25. கடந்த 2017ல் சர்வதேச போட்டியில் காலடி வைத்த இவர், இதுவரை 18 ஒருநாள் (748 ரன்), 22 சர்வதேச ‘டுவென்டி–20’ (417) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் பயிற்சியாளராக உள்ள டில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரது பார்வை டெஸ்ட் போட்டி மீது திரும்பி உள்ளது.

இதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறியது: டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக டெஸ்டில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐ.பி.எல்., தொடரில் சிறந்த வீரரான பாண்டிங் பயிற்சியின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி. இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பார். கேப்டன் கோஹ்லி வெற்றிக்காக கடுமையாக போராடக் கூடியவர். இந்தியாவின் சச்சின், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோரை ‘ரோல் மாடலாக’ கொண்டுள்ளேன். இந்திய பவுலர்களில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மிகவும் பிடிக்கும். இந்திய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடிக்கும்.

இவ்வாறு ஸ்ரேயாஸ் கூறினார்.

மூலக்கதை