வீட்டை விட்டு வெளியே வராதே * அஷ்வினின் ‘மன்கேடிங்’ அறிவுரை | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
வீட்டை விட்டு வெளியே வராதே * அஷ்வினின் ‘மன்கேடிங்’ அறிவுரை | மார்ச் 25, 2020

சென்னை: ‘‘மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருங்கள்,’ என இந்திய வீரர் அஷ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு வெளியானது. இதனால் விமானம், ரயில், பஸ் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், தேவையற்ற முறையில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

இதனிடையே கடந்த ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக இருந்த அஷ்வின், ராஜஸ்தானின் பட்லரை ‘மன்கேடிங்’ முறையில் அவுட்டாக்கினார். ‘பட்லர் கிரீசை விட்டு வெளியே நிற்க, அஷ்வின் ‘பைல்சை’ தகர்ப்பது’ போன்ற போட்டோ நேற்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

இதுகுறித்து அஷ்வின் கூறியது:

இந்த ‘ரன் அவுட்’ நடந்து சரியாக ஒரு ஆண்டு ஆனது. அந்த போட்டோவை சிலர் எனக்கும் அனுப்பி இருந்தனர். ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மக்கள் இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்த இது தான் சரியான நேரம். 21 நாட்களுக்கு தேவையற்ற முறையில் வீடுகளை வீட்டு வெளியேற வேண்டாம், வீடுகளில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை