ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைப்பு; முதல்ல லைப்... அப்புறம்தான் ஸ்போர்ட்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் வரவேற்பு

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைப்பு; முதல்ல லைப்... அப்புறம்தான் ஸ்போர்ட்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் வரவேற்பு

புதுடெல்லி: டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆக. 9 வரை திட்டமிடப்பட்ட கோடைகால ஒலிம்பிக் போட்டி ெகாரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. டோக்கியோ விளையாட்டுக்கள் ஒத்திவைக்கப்பட்டதை இந்தியாவின் விளையாட்டு  வீரர்கள் பாராட்டினர். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி)  தலைவர் தாமஸ் பாக் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலுக்குப் பிறகு, டோக்கியோவில் திட்டமிடப்பட்ட போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்திய குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம். டென்னிஸ் வீராங்கனை சாய்னா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, முன்னாள் உலக சாம்பியன் பளுதூக்குபவர் மீராபாய் சானு, 25 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதி பெற்ற ஷூட்டர் ரஹி சர்னோபத், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற செயல்திறனுடன் 57 கிலோ பிரிவில் தகுதி பெற்ற மல்யுத்த வீரர் ரவி தஹியா, இரட்டையர் பூப்பந்து ஜோடி சிராக் ஷெட்டி மற்றும் சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி, ஆண்கள் ஹாக்கி பயிற்சியாளர் கிரஹாம் ரீட், ஆர்ச்சர் தீபிகா குமாரி, ரைபிள் துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் மவுட்கில் உள்ளிட்டோர் போட்டி ஒத்திவைப்பதை வரவேற்றனர். அவர்கள் ஒரே குரலில் கூறியது என்னவென்றால், ‘ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டது நல்லது; இப்போது எங்களுக்கு பயிற்சி மற்றும் திட்டமிடுதலுக்கு நேரம் உள்ளது. முதலில் மக்களின் வாழ்க்கை; அப்புறம்தான் விளையாட்டு போட்டிகள் எல்லாம். ஒலிம்பிக் போட்டிக்காக முழுமையாக தயாரிப்பு நிலையில் உள்ள தகுதி பெற்ற வீரர்களுக்கு இது சற்று கடினமானது. அவர்கள் இன்னும் ஒரு வருடம் தங்களை மேலும் தயார்படுத்த வேண்டும்’ என்றனர்.

மூலக்கதை