இங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து; ரோஸியை கொரோனா கொன்றுவிடும்: நியூசிலாந்து வீரர் விமான நிலையத்தில் தவிப்பு

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து; ரோஸியை கொரோனா கொன்றுவிடும்: நியூசிலாந்து வீரர் விமான நிலையத்தில் தவிப்பு

லண்டன்: நியூசிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இயன் ஓ பிரையன் (43), இங்கிலாந்தில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினரைப் பார்க்கச் செல்ல ஒரு விமானத்துக்காகக் காத்திருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது: என் மனைவி ரோஸி மற்றும் இங்கிலாந்தில் அலெத்தியா மற்றும் ஜெய்ன் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். என் மனைவிக்கு நுரையீரல் பிரச்னை உள்ளது. அவருக்கு எந்தவிதமான மார்பு நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அது அவரது வாழ்க்கையில் உள்ள நாட்களை குறைத்துவிடும். கொரோனா வைரஸ் அவளைக் கொல்லக்கூடும். அவளுக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் அவளுடைய அம்மாவுக்கு 80 வயதாகிறது. இந்த நேரத்தில் அவளுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். நான் இப்போது இங்கு இருப்பதால், அவளுக்கு மன அழுத்தத்தை அதிகமாக்குகிறேன் என்று நினைக்கிறேன். வெலிங்டனிலிருந்து இங்கிலாந்து செல்லும் விமானம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நான் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். மூன்று விமானங்களுக்கு டிக்கெட் வாங்கினேன்; அவற்றில் எதுவுமே செயல்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் என்னால் டிக்கெட் மட்டும் வாங்க முடிந்தது. என்னை விடக் கடினமான சூழ்நிலைகளில் மக்கள் உள்ளனர். கடந்த 6-7 மாதங்களாக கடினமான மனநல பாதிப்பை அனுபவித்து வருகிறேன். இப்போது ஓரளவு சரியாகி விட்டேன். கண்ணீர் விடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஐந்து வருடங்களாகப் பார்க்காத என் சகோதரரைக் கூட பார்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை