போட்டிகள் நிறுத்தம்: எம்.சி.ஏ., அறிவிப்பு | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
போட்டிகள் நிறுத்தம்: எம்.சி.ஏ., அறிவிப்பு | மார்ச் 25, 2020

மும்பை: ஊரடங்கு உத்தரவு காரணமாக வரும் ஏப். 14 வரை அனைத்து போட்டிகளையும் ஒத்திவைப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) அறிவித்துள்ளது.

மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) அலுவலகம் வான்கடே மைதானத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 21 வரை நிறுத்திவைக்கப்பட்ட இதன் அலுவலக பணிகள் வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால் நாடு முழுவதும் வரும் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எம்.சி.ஏ., அலுவலம் வரும் ஏப். 14 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தவிர, இக்கால கட்டத்தில் நடக்க உள்ள அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் இதுவரை 112 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை