ம.பி., அணிக்கு கோப்பை: சந்திரகாந்த் நம்பிக்கை | மார்ச் 25, 2020

தினமலர்  தினமலர்
ம.பி., அணிக்கு கோப்பை: சந்திரகாந்த் நம்பிக்கை | மார்ச் 25, 2020

மும்பை: ‘‘உள்ளூர் போட்டிகளில் மத்திய பிரதேச அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிப்பேன்,’’ என, அந்த அணியின் புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சந்திரகாந்த் பண்டித் 58. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இந்தியாவுக்காக 5 டெஸ்ட் (171 ரன்), 36 ஒருநாள் (290) போட்டிகளில் விளையாடி உள்ளார். தவிர இவர், உள்ளூர் போட்டிகளில் மும்பை, மத்திய பிரதேசம், அசாம் அணிகளுக்காக பங்கேற்றுள்ளார். ஓய்வுக்கு பின் மும்பை, மஹாராஷ்டிரா, கேரளா, விதர்பா அணிகளுக்கு பயிற்சியாளராகவும், ராஜஸ்தான் அணிக்கு இயக்குனராகவும் இருந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் விதர்பா அணி கடந்த 2 சீசனில் (2017–18, 2018–19) ரஞ்சி மற்றும் இரானி கோப்பை வென்றது. தற்போது இவர், மத்திய பிரதேச அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சந்திரகாந்த் கூறுகையில், ‘‘கடந்த காலத்தில் நான் விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. விதர்பா அணி போல, மத்திய பிரதேச அணியிலும் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களை வைத்து உள்ளூர் போட்டிகளில் மத்திய பிரதேச அணி கோப்பை வெல்ல தேவையான முயற்சிகள் மேற்கொள்வேன்,’’ என்றார்.

மூலக்கதை