சிரஞ்சீவி & ராம் சரண் கூட்டணியில் இணையும் காஜல் அகர்வால்

FILMI STREET  FILMI STREET
சிரஞ்சீவி & ராம் சரண் கூட்டணியில் இணையும் காஜல் அகர்வால்

சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஆச்சார்யா படத்தை அவரது மகன் ராம் சரண் தயாரிக்கவுள்ளார்.

இதனை கொரட்டலா சிவா இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகைகள் தேர்வில் நிறைய நடிகைகள் பெயர்கள் அடிப்பட்டன.

ரெஜினா நடிப்பார் என கூறப்பட்டது. பின்னர் த்ரிஷா நடிக்கிறார் என செய்திகள் வந்தன.

தற்போது காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காஜலும் அண்மையில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இவையில்லாமல் பிருந்தா மாஸ்டர் இயக்கும் சினாமிகா படத்திலும், இந்தியன் 2 படத்திலும், துப்பாக்கி 2 படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Kajal Aggarwal to romance Chiranjeevi in Acharya movie

மூலக்கதை