உங்க அரசியல் இப்ப வேணாம்.; கமலை கண்டித்த கௌரவ் நாராயணன்

FILMI STREET  FILMI STREET
உங்க அரசியல் இப்ப வேணாம்.; கமலை கண்டித்த கௌரவ் நாராயணன்

உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த இன்றுமுதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறும்போது…

‛‛உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்கு பசியாற்றுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல.

இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன் சிறு தொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என பதிவிட்டார்.

இந்த செய்தியை நம் தளத்தில் முதன்முதலாக பதிவிட்டு இருந்தோம்.

கொடூரமான கொரோனா பீதியில் கூட கமல் அரசியல் செய்கிறாரே என என கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் நடிகருமான கௌதவ் கூறியுள்ளதாவது…

‛‛அன்புள்ள கமல் சார். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் எச்சரிக்கவும் இது நேரமல்ல. ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் ஆழ்வார்பேட்டை மக்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றலாம்.

உங்களின் ரசிகனாக நான் தூங்கா நகரத்தில் அதை செய்கிறேன்” என கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gaurav Narayanan slams Kamal in Corona India lock down issue

Dear Kamal sir , this is not the time to talk politics or warn the government or authorities . Being an actor and an active politician u can take care of entire Alwarpet downtrodden people’s need. As a fan of urs I’m doing the same in thoonganagaram.

மூலக்கதை