பெப்சி-க்கு கமல் 10 லட்சம்; ஷங்கர் 10 லட்சம்; தனுஷ் 15 லட்சம் உதவி

FILMI STREET  FILMI STREET
பெப்சிக்கு கமல் 10 லட்சம்; ஷங்கர் 10 லட்சம்; தனுஷ் 15 லட்சம் உதவி

கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தினக்கூலியை நம்பியுள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகள் தங்களால் முடிந்த பண உதவியை கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில் வேலையிழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு, நடிகர் நடிகைகள் உதவிட வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம், மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் 1 லட்சம் என பல்வேறு பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

Kamal Dhanush Shankar and Lokesh donates to FEFSI

மூலக்கதை