மரண பயம் காட்டும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ தாண்டியது....கேரளாவில் பாதிப்பு 118-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மரண பயம் காட்டும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியது....கேரளாவில் பாதிப்பு 118ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. உலக நாடுகள் மூடுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவுவது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய போது நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள்  யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 118-ஆக அதிகரிப்புகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118-ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 118-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை வீடியோ காட்சி மூலம் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

மூலக்கதை