ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 514 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 514 பேர் உயிரிழப்பு

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 514 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் சுமார்  195 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி பிதுங்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயினில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஸ்பெயினில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்  சீனாவில் கொரோனா வைரசால் பாதிப்பால்  514 0பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கொரோனா காரணமாக 2,696 பேர் ஸ்பெயினில் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக, ஏப்ரல் 11 ஆம் தேதி வரை ஸ்பெயினில் நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை