சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னாவிற்கு 2வது ஆண் குழந்தை: சக வீரர்கள், ரசிகர்கள் பாராட்டு

தினகரன்  தினகரன்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னாவிற்கு 2வது ஆண் குழந்தை: சக வீரர்கள், ரசிகர்கள் பாராட்டு

மும்பை: இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. 2016ம் ஆண்டு தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிரேசியா என்று பெயரிட்டனர். இந்நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னா - பிரியங்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா, ‘ஆச்சரியம், நம்பிக்கை, சாத்தியங்கள் மற்றும் சிறந்த உலகம் இவை அனைத்தும் தொடங்கிவிட்டன. எங்களின் மகனையும், கிரேசியாவின் தம்பியான ரியோ ரெய்னாவையும் வரவேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவன் எல்லைகளை கடந்து அனைவரது வாழ்விலும் அமைதி, புதுமைகளையும், வளங்களையும் கொண்டுவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். ரெய்னாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில், சுரேஷ் ரெய்னாவின் சிஎஸ்கே அணியின் சக வீரர் ஹர்பஜன் சிங், குழந்தைக்கும் தம்பதியினருக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை