பங்குச் சந்தையை மூடுங்கள் தரகர்கள் சங்கம் கோரிக்கை

தினமலர்  தினமலர்
பங்குச் சந்தையை மூடுங்கள் தரகர்கள் சங்கம் கோரிக்கை

மும்பை: இந்திய பங்குத் தரகர்கள்சங்கம், பங்குச் சந்தைகளை, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது மூடி விடுமாறு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் கோரிக்கை வைத்துள்ளது.

பல மாநிலங்கள், கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதற்காக, 144 தடை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், பங்குத் தரகை, அத்தியாவசிய சேவையாக பல மாநிலங்கள் அறிவிக்காத நிலையில், பாக்கி கணக்குகளை முடித்துக்கொள்ள ஏதுவாக, இரண்டு நாட்கள் சந்தையை மூட வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே, அத்தியாவசிய சேவை பிரிவில், பங்குச் சந்தை சார்ந்த பணிகளை இணைத்துள்ளன. அனைத்து மாநிலங்களும், அத்தியாவசிய பிரிவில் சேர்க்காத நிலையில், சந்தையை மூடி விடும்படி, பங்குத் தரகர்கள் சங்கம்தற்போது கோரிக்கை வைத்துள்ளது.

மூலக்கதை