கொரோனா வைரஸ் தடுப்பு நிதி எஸ்.பி.ஐ., அறிவிப்பு

தினமலர்  தினமலர்
கொரோனா வைரஸ் தடுப்பு நிதி எஸ்.பி.ஐ., அறிவிப்பு

சென்னை : ஆண்டு லாபத்தில், 0.25 சதவீதத்தை, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கி, பாரத ஸ்டேட் வங்கி அறிவித்து உள்ளது.

இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டு லாபத்தில், 0.25 சதவீதம் தொகையை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை, பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, கொரோனாவை எதிர்த்து போராட செலவு செய்யப்படும்.

கொரோனா வைரசால் பாதிக்கப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் மருத்துவத்திற்காக, இந்த தொகை பிரதானமாக பயன்படுத்தப்படும். இதன் துவக்கமாக, கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பது, கிருமி நாசினியை பயன்படுத்துதல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆக்சிஸ் வங்கிகொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு உதவும் வகையில், ஆக்சிஸ் வங்கி, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், விற்பனையாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, ஆக்சிஸ் வங்கி தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை