கொரோனாவால் விலை நிர்ணய விதிமீறல் 4,000 விற்பனையாளர் நீக்கம்: அமேசான் அதிரடி நடவடிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் விலை நிர்ணய விதிமீறல் 4,000 விற்பனையாளர் நீக்கம்: அமேசான் அதிரடி நடவடிக்கை

லண்டன்: கொரோனா பாதிப்பால் பொருட்களின் விலை நிர்ணயத்தில் விதிமீறல் செய்த 4,000 விற்பனையாளர்களை அமேசான் நிறுவனம் நீக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக பரவி வருவதால், பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வர்த்தகம், தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. இந்நிலையில், ஆன்லைனில் பொருட்களை சப்ளை செய்யும் சர்வதேச நிறுவனமான அமேசான், தற்போது தாங்கள் சப்ளை செய்யும் பொருட்களின் பட்டியலில், கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலை நீக்கியுள்ளதாக அமேசான் கூறியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4,000 பொருட்களின் விற்பனையாளர்களின் கணக்குகளை நிறுத்தியுள்ளது. பொருட்களின் விலை நிர்ணயம் குறித்த விதிகளை மீறியதற்காக அவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமேசான் தனது இணைய பக்கத்தில், ‘விற்பனையாளர்கள் விலை நிர்ணயம் செய்யவில்லை; கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பு நெருக்கடியால் பொருட்களின் விலை நிர்ணயம் செய்வதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். பொருட்களின் விலையை பலமடங்கு உயர்த்தி விற்கும் விற்பனையாளர்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திடம் புகார் அளித்து வருகிறோம். விதிமுறை மீறியதாக கருதப்படும் 4,000 விற்பனையாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்’ என்று அறிவித்துள்ளது.

மூலக்கதை