தனிமையில் சங்ககரா | மார்ச் 23, 2020

தினமலர்  தினமலர்
தனிமையில் சங்ககரா | மார்ச் 23, 2020

கொழும்பு: லண்டனில் இருந்து திரும்பிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககரா, கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டார்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்ககரா 42. இவர், சமீபத்தில் லண்டனில் இருந்து நாடு திரும்பினார். இலங்கையில் இதுவரை 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 1 முதல் 15 வரை ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள், தானாக முன்வந்து போலீசில் தங்களது பெயரை பதிவு செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளும்படி இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து சங்ககரா, போலீசில் தனது பெயரை பதிவு செய்து, சுய தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுகுறித்து சங்ககரா கூறுகையில், ‘‘கடந்த வாரம் தான் லண்டனில் இருந்து இலங்கைக்கு வந்தேன். அரசு கூறியபடி போலீசில் எனது பெயரை பதிவு செய்து கொண்டு, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இதுவரை எனக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இருப்பினும் அரசு வழங்கிய ஆலோசனைகளை கடைபிடித்து வருகிறேன்,’’ என்றார்.

இதேபோல, இங்கிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி, சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மூலக்கதை