வீட்டில் இருந்து வேலை: ஐ.சி.சி., | மார்ச் 23, 2020

தினமலர்  தினமலர்
வீட்டில் இருந்து வேலை: ஐ.சி.சி., | மார்ச் 23, 2020

துபாய்: ஐ.சி.சி., தலைமையக ஊழியர்கள், வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைமையகம் துபாயில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல்., உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஐ.சி.சி., தலைமையகத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்த படி வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஐ.சி.சி., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. ஐ.சி.சி., நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் படி, எங்கள் ஊழியர்கள் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பம், சமுதாயம் பாதுகாக்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை