வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் உறவினர்கள் பஞ்சாப்பில் 167 பேர் திடீர் மாயம்: மருத்துவ அதிகாரி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் உறவினர்கள் பஞ்சாப்பில் 167 பேர் திடீர் மாயம்: மருத்துவ அதிகாரி தகவல்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 167 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்களின் பட்டியலை பெற்று அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா? என சோதனை செய்ய மருத்துவ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பட்டியலில் உள்ளவர்களின் முகவரிகளைத் தேடிச் சென்றபோது அவர்களைக் காணவில்லை.

அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள், தாங்கள் கொடுத்த முகவரியில் இல்லாதது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடக்கிறது.

இதுகுறித்து, லூதியானா மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்கா கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து லூதியானாவுக்கு திரும்பியவர்களின் பட்டியலில் காணாமல் போனவர்களில் 17 பேரை கண்டு பிடித்துள்ளோம்.

இன்னும் 167 பேரை காணவில்லை. தேடும் பணியில் சுகாதார துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்ணில் தவறான முகவரி இருப்பதால் அவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. முகவரி மற்றும் தொலைபேசி எண்களை மாறிவிட்டதாகத் தெரிகிறது” என்றார்.


.

மூலக்கதை