அரசு உத்தரவை மீறி கடை திறப்பு; ‘சீல்’ வைத்த அதிகாரிகள் குறித்து அவதூறு பேச்சு: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு உத்தரவை மீறி கடை திறப்பு; ‘சீல்’ வைத்த அதிகாரிகள் குறித்து அவதூறு பேச்சு: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு

சென்னை: அரசு உத்தரவு மீறி திறந்த கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசி மிரட்டிய பிரபல துணிக்கடை மேலாளர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மூட  அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவை மீறி பலர் கடைகளை திறந்து வியாபாரம்  செய்து வருகின்றனர். அரசு உத்தரவை மீறி கடைகளை அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் 10 மாடி கொண்ட பிரபல துணி கடை ஒன்று அரசு உத்தரவை மதிக்காமல் கடையை திறந்து கடந்த 17ம் தேதி வியாபாரம் செய்தனர்.

இதுகுறித்து சென்னை பெருநகர 58வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் சம்பந்தப்பட்ட கடையின் மேலாளரிடம் அரசு உத்தரவுப்படி கடையை மூடும் படி கேட்டுள்ளார். அதன்படி கடையை மேலாளர் குருநாதன் மூடினார்.

பிறகு சிறிது  நேரத்தில் கடையை திறந்து வியாபாரம் செய்யப்பட்டது. பின்னர் சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் மீண்டும் கடையின் மேலாளர் குருநாதனிடம் கடையை மூடும் படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் சரியாக பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தலைமையில் சுகாதார  ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டி, எஸ்ஓ வாசுதேவன் ஆகிய 5 அதிகாரிகள் கடையில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி கடையை மூடி சீல் ைவத்தனர்.



பிறகு நேற்று மீண்டும் 11 மணிக்கு கடையில் இயங்கி வரும் சிறிய கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டி பிரபல கடையின் மேலாளர் குருநாதனிடம் கடையை மூடும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ்பாண்டி வேப்பேரி காவல்நிலையத்தில் பிரபல துணிக்கடை மேலாளர் குருநாதன் மீது புகார் அளித்தார்.

போலீசார், மேலாளர் குருநாதன் மீது ஐபிசி 294(பி), 341,353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் சிறிது ேநரம் புரசைவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை