லித்துவேனியாவில் தவிக்கும் 20 மாணவரை அழைத்துவர நடவடிக்கை: தமிழக பாஜக தலைவர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லித்துவேனியாவில் தவிக்கும் 20 மாணவரை அழைத்துவர நடவடிக்கை: தமிழக பாஜக தலைவர் தகவல்

சென்னை: லித்துவேனியாவில் சிக்கித்தவிக்கும் 20 தமிழக மாணவகர்களை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக பாஜ தலைவர் எல். முருகன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாட்டில் 20க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள விலினஸ் ஜெடிமினஸ் டெக்னிகல் பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும், 60க்கும் மேற்பட்ட இதர மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவர்கள் ஜெடிமினஸ் பலகலைக்கழகம் மற்றும் கவுனஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் தகவல் வந்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பார்வைக்கு கொண்டு சென்று மாணவர்களை உடனே தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை