பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை: பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ கோரிக்கைக்கு அமைச்சர் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை: பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ கோரிக்கைக்கு அமைச்சர் உறுதி

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு பேசியது: துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் 4446 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் எம். பி. யுடன் நான் ஆய்வு செய்தபோது, ‘நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும், தேவையான பொருட்களை வழங்க வேண்டும், விலங்கியல் துறைக்கு தனிக்கட்டிடம் கட்ட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அப்படி இருக்கும்போது, அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் பேராசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இந்த கல்லூரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவிகள்தான் அதிகம் படிக்கின்றனர். இந்த கல்லூரியில் கட்டிடங்கள் சாலையின் இருபுறமும் உள்ளது.

சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. எனவே இதை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் கட்டி தர வேண்டும்.

இதற்கு பதிலளித்து உயர்கல்வி துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் பேசுகையில், வரும் கல்வி ஆண்டில் 10 வகுப்பறைகள் கூடுதலாக கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும்.

.

மூலக்கதை