5 கோட்டங்களில் இ-ஆபீஸ்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 கோட்டங்களில் இஆபீஸ்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

சென்னை: பேப்பர் இல்லாமல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 5 கோட்டங்களில் இ-ஆபீஸை தெற்கு ரயில்வே துவங்கியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயில் பொது மேலாளர் ஜான் தாமஸ் 5 கோட்டங்களில் இ-ஆபீஸ் முறையை திறந்து வைத்தார்.

அதில், சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகியனவாகும். ரயில் டெயில் ஏற்கனவே வெற்றிகரமான முறையில் இ-ஆபீஸைசெயல்படுத்தி வருகிறது.

இந்த அலுவலகம் திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதன் மூலம் தெற்கு ரயில்வே பேப்பர் அல்லாத வேலை முறைக்கு முழுவதுமாக வந்துள்ளது.

இந்த திட்டத்தை ரயில்டெயில் கார்பரேஷன் செய்துள்ளது.

இதை 4வது ரயில்வேயாக நடைமுறைக்கு தெற்கு ரயில்வே கொண்டு வந்துள்ளது.

இதனுடைய நோக்கம் நம்பகமான, திறமையான, பயனுள்ள முறையில் அலுவலக கோப்புகள், ஆவணங்களை முற்றிலுமாக கண்காணிக்க முடியும். மேலும் வேகமாக பணிகளை செய்ய முடியும்.

இதன்மூலம் பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடியும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அனைத்து ஊழியர்கள், பணியாளர்களை வரவேற்கிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை