கொரோனா தடுப்பு விழிப்புணர்வு; ‘மாஸ்க்’ அணிந்தபடி திருமண விழா: ஆந்திர மாநிலத்தில் அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு; ‘மாஸ்க்’ அணிந்தபடி திருமண விழா: ஆந்திர மாநிலத்தில் அசத்தல்

கோதாவரி: கொரோனா தடுப்பு விழிப்புணர்வின் ஒருபகுதியாக ‘மாஸ்க்’ அணிந்தபடி  திருமண விழா, ஆந்திர மாநிலத்தில் அசத்தலாக நடந்தது.
கொரோனா தொற்றுநோய் கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

வெளியூர் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு முகக்கவசங்கள் அணிவதைக் காட்டிலும் கைகளை கழுவுவதுதான் மிகச்சரியான தடுப்பு முறை எனவும் தெரிவித்துள்ளது.

சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் வகையில் முகக்கவசம் போட்டுக்கொள்வது நல்லது.

அதனால், நகரின் முக்கிய சாலைகளில் பயணிப்போர், முகக் கவசங்களை அணிந்தபடியே செல்கின்றனர். பல இடங்களில் முகக் கவசம் அணிந்தபடி மக்கள் செல்வதால், விழிப்புணர்வுக்கு ஓரளவு பலன் கிடைத்து வருகிறது.

அதன்படி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த அறிவுறுத்தல்களை பல்வேறு வகையில் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரபிரதேசம் மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உங்குட்டூர் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.அதில் சடங்கு நிகழ்ச்சிகளின்போது புதுமண தம்பதிகள், புரோகிதர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் முகத்தில் ‘மாஸ்க்’ என்ற முக கவசம் அணிந்துக்கொண்டு விழிப்புணர்வுடன் பங்கேற்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விழிப்புணர்வை பலரும் பாராட்டி, புதுமண தம்பதிக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.


.

மூலக்கதை