கொரோனா வேகமாக பரவுவதால் ராஜஸ்தான் முழுவதும் 144 தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வேகமாக பரவுவதால் ராஜஸ்தான் முழுவதும் 144 தடை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தர்வு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா விழிப்புணர்வு காலர் டோன், ஊடகங்களில் விளம்பரம், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், சுற்றுலா தலங்கள் என மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகில் 160 நாடுகளுக்கும் அதிகமாக பரவியுள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தபட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும்,

பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தர்வு பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இதுவரை 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை