‘கோரன்டைன்’ வார்டில் இருந்தவர் 7வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை: டெல்லியில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘கோரன்டைன்’ வார்டில் இருந்தவர் 7வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்றிரவு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனை கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து டெல்லி திரும்பியிருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட அவர், டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள எஸ். எஸ். பி கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு 9 மணியளவில் எஸ். எஸ். பி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஒரு வருடமாக சிட்னியில் இருந்த அவர், தற்போது டெல்லி வந்திருந்த போது விமான நிலையத்தில் சோதனை செய்துள்ளனர். அங்கு அவருக்கு தலைவலி, காய்ச்சல் இருந்துள்ளது.

அதனால் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


.

மூலக்கதை