இந்தியாவில் 170 பேருக்கு கொரோனா: இன்றிரவு பிரதமர் மோடி உரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் 170 பேருக்கு கொரோனா: இன்றிரவு பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. இன்றிரவு பிரதமர் மோடி ஊடகங்கள் வாயிலாக உரையாற்ற உள்ளார்.

சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 2. 19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அதேபோல பலியானர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது.

தற்போதைய புள்ளிவிபரபடி நேற்று மட்டும் 438 ேபர் புதியதாக பாதித்தோராகவும், 23 பேர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 பேரிலிருந்து 170 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான 170 பேரில் 3 பேர் இறந்த நிலையில் 16 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் வாரியாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, ஆந்திராவில் 2, டெல்லியில் 10, அரியானாவில் 17, கர்நாடகாவில் 14, கேரளாவில் 27, பஞ்சாபில் 2, ராஜஸ்தானில் 7, தமிழ்நாட்டில் 1, தெலங்கானாவில் 13, ஜம்மு-காஷ்மீரில் 4, லடாக்கில் 8, உத்தரகண்டில் 1, ஒடிசாவில் 1 மற்றும் மேற்கு வங்கத்தில் 1, மற்ற மாநிலத்தில் 17 பேர் பாதித்துள்ளனர்.

இதற்கிடையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளுவது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை