கொரோனா விடுமுறையை கோடை விடுமுறை போல் கொண்டாடும் பெற்றோர்கள்: விழிப்புணர்வு ஏற்படுவது எப்போது?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா விடுமுறையை கோடை விடுமுறை போல் கொண்டாடும் பெற்றோர்கள்: விழிப்புணர்வு ஏற்படுவது எப்போது?

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் வெளியே செல்லாமல் இருக்க அறிவுறுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்காக பொதுத்தேர்வுகளையும் தள்ளிவைத்தனர்.

விடுமுறை என்பது, மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும், வெளியிடங்களுக்கு சென்றால் கூட்ட நெரிசலின் காரணமாக பரவும் என்பதின் காரணமாக தான் விடுமுறை விடப்பட்டது. ஆனால் மாணவர்களோ இதனை அலட்சியப்படுத்தி வெளியிடங்களுக்கு சென்று விளையாடுவதோடு, பல இடங்களுக்கும் சென்று சுற்றித் திரிந்து வருகின்றனர்.

மாணவர்கள் தான் இப்படி என்று பார்த்தால், பெற்றோர்கள் கொரோனா குறித்து சிறிதும் விழிப்புணர்வு இல்லாமல், விளையாட்டு பயிற்சி வகுப்புகள், இசைப் பள்ளிகள், கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

பலர் டியூஷன்களுக்கும் அனுப்பி வருகின்றனர். இது குறித்து விளையாட்டு பயிற்சி பள்ளி நடத்தும் சிலர் கூறியதாவது: கோடை விடுமுறையில் எங்கள் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் ஆனால், தற்போது அதிகமாக மாணவர்களை பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கின்றனர் என்றனர்.

இதுபோன்று மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

.

மூலக்கதை